இயக்குனர் முத்துராமனுக்கு கொரோனா உறுதி!

முன்னணி இயக்குனர் எஸ் பி முத்துராமனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான முத்துராமன் ரஜினிக்கு பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். கடைசியாக அவர் ரஜினியை வைத்து பாண்டியன் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் பெரிதாக படங்கள் இயக்காத அவர் அவ்வப்போது திரைப்பட விழாக்களுக்கு வருகை புரிந்துவந்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. இப்போது அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.