தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளியேறிய மேலும் 25 பேர்..!
புஸ்ஸ கட்ற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் முடிவடைந்த மேலும் 25 பேர் வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் இவ்வாறு வெளியேறி சென்றதாக கடற்படை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய புஸ்ஸ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 249 பேர் வீடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் 89 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.