யாழில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

யாழில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உணவகத்தின் கழிவு நீரினை வீதியில் விட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவக  உரிமையாளர் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை கழிவு நீர் தொட்டியிற்குள் விடாது வெளிச்சூழலுக்கு அப்புறப்படுத்தியுள்ளார்.

யாழில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்! | Fined Discharging Restaurant Wastewater In Jaffna

இந்நிலையில்  , உணவகத்தில் கழிவுகள் திரள அனுமதித்தமை, உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டு, உணவாக உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபப்ட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு வியாழக்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , உரிமையாளர் தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.