இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 25 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 20 ஆயிரத்து 903 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

379 மரணங்கள் நேற்று பதிவான நிலையில், இந்தியாவில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், 20 ஆயிரத்து 32 பேர் நேற்று குணமடைந்த நிலையில், இதுவரையில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 79 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 இலட்சத்து 81 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது. 5 இலட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62 இலட்சத்து 92 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.