இன்றைய ராசி பலன்கள் 03/04/2021

இன்றைய ராசி பலன்கள் 03/04/2021

மேஷம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் உண்டு. பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். பிள்ளைகளால் பெருமை சேரும்

ரிஷபம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காத நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் செலவே அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு.

மிதுனம்

நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்

கடகம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்

சிம்மம்

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பால் நலம் காண்பீர்கள். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்ற சிந்தனை அதிகரிக்கும்

கன்னி

உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். தேகநலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடுமாற்றம் அகலும்

துலாம்

குடும்பத்தினரிடம் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். துணிச்சலுடன் செயல்படும் நாள்

விருச்சகம்

சந்தோஷமான நாள். நிலையான வருமானத்திற்கு வழியைமத்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படிபேசாதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடம் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்

கும்பம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மீனம்

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும். விருப்ப ஓய்வு பற்றிச் சிந்திப்பீர்கள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது