பசறை பேருந்து விபத்து: பேருந்தின் சாரதி மீள விளக்கமறியலில்

பசறை பேருந்து விபத்து: பேருந்தின் சாரதி மீள விளக்கமறியலில்

பசறை -13ஆம் கட்டை பேருந்து விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி 5 லட்சம் ரூபா பெறுமதியுடைய இரண்டு சரீர பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் கைதான பேருந்தின் சாரதி மற்றும் பார்வூர்தி ஆகியவற்றின் சாரதிகள் இன்று பசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை 13ஆம் கட்டை பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் மரணித்ததோடு 30 பேர் வரை காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது