மன்னார் - மதவாச்சி வீதியில் விபத்து! சாரதி படுகாயம்!

மன்னார் - மதவாச்சி வீதியில் விபத்து! சாரதி படுகாயம்!

மன்னார் - மதவாச்சி (ஏ14) பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், தள்ளாடிச் சந்திப் பகுதியில் கிரவல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் இன்று வியாழக்கிழமை குடை சாய்ந்து விபத்திற்கு உள்ளாகியதில் சாரதி படுகாயமடைந்தார்.

மதவாச்சி பகுதியிலிருந்து மன்னார் நகருக்குள் கிரவல் ஏற்றிக் கொண்டு வந்தபோதே குறித்த டிப்பர் வாகனம் தள்ளாடி வை சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து, குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதன் போது குறித்த வீதியினால் பயணித்தவர்களினால் குறித்த டிப்பர் வாகன சாரதி மீட்கப்பட்டு பலத்த காயத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.