புர்காவை தடைசெய்வதில் உறுதியாக உள்ள சரத்வீரசேகர

புர்காவை தடைசெய்வதில் உறுதியாக உள்ள சரத்வீரசேகர

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புர்காவைத் தடை செய்வதற்கான அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (31) தெரிவித்தார்.

அத்துடன் இந்த முன்மொழிவு திரும்பப் பெறப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை , தீவிர இஸ்லாமிய அமைப்புகள் நாட்டில் செயற்பட தடை விதிக்க உளவுத்துறை அறிக்கைகளைப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது