தேங்காய் எண்ணெய் விவகாரம் -மகிந்த தெரிவித்துள்ள முக்கிய விடயம்

தேங்காய் எண்ணெய் விவகாரம் -மகிந்த தெரிவித்துள்ள முக்கிய விடயம்

புற்றுநோயை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை நாட்டுக்கு கொண்டுவந்தவர்களுக்கு உதவிய அனைவரின் விபரங்களையும் சம்பந்தப்பட்ட விசாரணைக் குழு ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

நடத்தப்படும் விசாரணைகள் மூலம் விஷத்தன்மை கொண்ட தேங்காய் எண்ணெயை முதன்முதலில் இலங்கைக்கு கொண்டு வந்த காலம் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட முடியும் என்றும் இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளை அரசியல் கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித நியாயத்தன்மையும் இல்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு தகுதியற்றது என்று முடிவு செய்த அதிகாரிகளை பிரதமர் பாராட்டினார்,