
இன்றைய ராசி பலன்கள் 28/3/2021
மேஷம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள். உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.
ரிஷபம்
செலவுகள் அதிகரிக்கும் நாள். செய்தொழிலில், மாற்றங்கள் செய்யும் எண்ணம் உருவாகும். இல்லத்தினர்களின் ஆலோசனையால் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு
கடகம்
குறைகள் அகல குமரனை வழிபட வேண்டிய நாள். கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்
சிம்மம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். நல்லவா்களின் தொடர்பு நீடிக்கும். சுணங்கிய காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். நூதனப்பொருட்களின் சேர்க்கை உண்டு
கன்னி
விவாகப் பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம சீராகி ஆனந்தப்படுத்தும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். வாகனப் பழுதுகளுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு
துலாம்
வருமானம் திருப்தி தரும் நாள். இருப்பினும் விரயங்களும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி மகிழ்வீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
விருச்சகம்
வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராகி அனந்தப்படுத்தும். பொது வாழ்வில் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
திறமை பளிச்சிடும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு
மகரம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வரன்கள் வாயில் தேடி வரும்
கும்பம்
முன்னேற்றம் காண முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். நேற்று செய்யாமல் விட்டுப்போன காரியமொன்றால் அவதிக்கு உள்ளாவீர்கள்.
மீனம்
சந்தோஷம் கூடும் நாள். எதிரிகள் விலகுவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாகப்பிரிவினைகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு