தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்ற நாள் - மார்ச்.21, 1990

தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக நமீபியா நாடு உள்ளது.

தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக நமீபியா நாடு உள்ளது. இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாடு தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் விந்தோக் ஆகும். ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது. இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

 


* 1413 - ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
* 1556 - கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
* 1788 - லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
* 1800 - ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்பரசராகப் பதவியேற்றார்.

* 1801 - பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.
* 1844 - பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும்.
* 1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* 1905 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ் பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்.

* 1913 - ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன.
* 1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
* 1933 - டேச்சு வதை முகாம், நாசிகளின் முதலாவது வதை முகாம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது.