பிரபல நடிகை ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ் தேஷ்முக் தன் மனைவி கண்முன்னே நடிகைக்கு முத்தம் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் கையை உடைத்து கொண்ட ஜெனிலியா, கட்டுப்போட்ட கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விழா ஒன்றில் தனது கணவருடன் ஜெனிலியா கலந்துகொண்டார். அதே விழாவுக்கு வருகை தந்திருந்த நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் ரித்தேஷ் தேஷ்முக் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது பிரீத்தி ஜிந்தாவின் கைகளில் ரித்தேஷ் முத்தமிட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெனிலியா தர்மசங்கடத்துடன் சிரித்துக் கொண்டிருப்பார்.
இந்த வீடியோ தற்போது திடீரென வைரலாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்குப் பின் வீட்டிற்கு வந்த பின் என்ன நடந்தது என்பதை காமெடியாக ஒரு வீடியோவை ஜெனிலியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது கணவரை போட்டு உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
For the love of the viral video.. 💚💚💚 & of course @Riteishd & the cutest ting ting @realpreityzinta pic.twitter.com/wCsPhDMPcq
— Genelia Deshmukh (@geneliad) March 19, 2021