இன்றைய ராசி பலன்கள் 20/3/2021

இன்றைய ராசி பலன்கள் 20/3/2021

மேஷம்

சிறு சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதியவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. மன உற்சாகம் உண்டு. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மனம் தெளியும்

ரிஷபம்

தடைகள் விலகி தனலாபம் கிடைக்கும் நாள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் தொழில் வளர்ச்சி கூடும். முக்கிய புள்ளிகள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். நல்ல தகவல் இல்லம் தேடிவரும்

மிதுனம்

பணியிடத்தில் சற்று கவனமாக பேசுவது நல்லது.
மனப்பக்குவம் அதிகரிப்பதால் வாக்குவாதங்கள் அகலும்.
அக்கம் பக்கத்தினருடன் இருந்த சிறு பிரச்னை முடியும்

கடகம்

குடும்பத்தில் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.
கவுரவம் குறையாமல் காப்பாற்றிக் கொள்வீர்கள். பேச்சில் கவனம் தேவை. திறமையால் பணிச்சுமையை சமாளித்து வெல்வீர்கள்

சிம்மம்

உத்தியோக முன்னேற்றம் ஏற்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிட்டும். பொதுவாழ்வில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரலாம். இடம், பூமியால் ஏற்பட்ட இன்னல்கள் தீரும். வருமானம் திருப்தி தரும்

கன்னி

பேச்சில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது.
இன்று புதுப்புது வாய்ப்புகள் வந்து மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.
பணியாளர்கள் கவனமாக இருந்து பாராட்டுப்பெறுவீர்கள்.

துலாம்

கவனக் குறைவால் கவலைகள் ஏற்படும் நாள். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். எதையும் துணிந்து செய்ய இயலாது

விருச்சகம்

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நீடிக்கும். சொத்து விற்பனையால் சொந்தங்கள் எதிரியாகலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

தனுசு

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக் கொள்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். நட்பால் நன்மை கிடைக்கும்

மகரம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். தேக நலன் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது

கும்பம்

அமைதி குறையும் நாள். சந்திக்கும் நண்பர்களால் விரயம் உண்டு. பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. முக்கிய புள்ளிகளின் பகையால் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும்.

மீனம்

உழைப்பினால் நற்பலன் உண்டாகும். மன உறுதி பிறக்கும்.
புதிய நண்பர்கள் அணுகினால் விசாரித்துச் சேர்த்துக் கொள்ளலாம்.பாராட்டும், வெற்றியும் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.