
கொட்டகலையில் பெண் கொலை; சந்தேகத்தில் இருவர் கைது!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை போரஸ்ட்கிரீட் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரித்துள்ளனர்.
வாய்தகராறு ஒன்றின்போது, ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்கப்பட்டு இப்பெண் உயிரிழந்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லபடவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்