நடிகர் ரகுவரன் இறந்த தினம் (மார்ச்.19, 2008)

நடிகர் ரகுவரன் இறந்த தினம் (மார்ச்.19, 2008)

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த புகழ் பெற்ற நடிகர் ரகுவரன். இவர் 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ்

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த புகழ் பெற்ற நடிகர் ரகுவரன்.

இவர் 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் வில்லன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

 


சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008ல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1279 - யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது.
* 1861 - நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது.
* 1915 - புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
* 1918 - நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.

* 1944 - இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர்.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
* 1972 - இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* 1982 - போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

* 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
* 2002 - ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
* 2004 - தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார்.