பங்குனி மாத ராசிபலன்கள்: யாருக்கு அதிர்ஷ்டம்? யாரெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

பங்குனி மாத ராசிபலன்கள்: யாருக்கு அதிர்ஷ்டம்? யாரெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

குருவின் வீடான மீன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் பங்குனி மாதம்.

இந்த மாதத்தில் சூரியன் மீன ராசியில் பயணிக்க சூரியனுடன் சுக்கிரனும், புதனும் இணைந்து பயணிக்கின்றனர்.

மேலும் குருபகவான் இந்த மாதத்தில் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு அதிசாரமாக செல்கிறார்.

பங்குனி மாதத்தில் கிரகங்களின் மாற்றத்தை பார்த்தால் கும்ப ராசியில் உள்ள சுக்கிரன் 3ஆம் தேதி மீன ராசிக்கு மாறுகிறார்.

16ஆம் தேதி புதன் மீன ராசிக்கு மாறுகிறார். 23ஆம் தேதி குரு கும்ப ராசிக்கு மாறுகிறார். 28ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 31ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார்.

இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் முழுக்க உங்களுக்கு யோகங்கள் அதிகமான மாதமாக உள்ளது. வரும். சூரியன் மறைந்திருப்பதால் அரசு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

பண வரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் முதலீடுகள் இரட்டிப்பாகும். குழந்தைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல வேலை கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் உண்டாகும்.

பங்குனி 23ஆம் தேதிக்கு மேல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தில் பண வரவு அதிகரித்தாலும் திடீர் செலவுகளும் சுப செலவுகளும் வரும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்ப உறவுகளிடம் இருந்த பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்வது நல்லது. ஞாயிறுக்கிழமைகளில் நரசிம்மரை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, சுக்கிரன், சூரியன், புதன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுடைய வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் மதிப்பு மரியாதை கூடும்.

சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்கள் நகைகள் வாங்கலாம். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். இந்த மாத பிற்பகுதி வரை குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

 

சுப காரியங்கள் நடைபெறும். ஜென்ம ராசியில் உள்ள ராகு செவ்வாயினால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரும். அதிகம் கோபப்பட வேண்டாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பேச்சில் கவனம் தேவை. பிரச்சினைகள் தீர விட்டுக்கொடுத்து செல்வது. திருமண சுப காரியங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்டங்கள் அதிகம் நடைபெறும் நல்ல மாதம். அதிசார குரு பெயர்ச்சியால் சந்தோஷம் அதிகரிக்கும் என்றாலும் வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. உங்களுடைய பெயரை கெடுக்கும் வகையில் சிலர் தேவையில்லாத வேலைகளை செய்வார்கள் எனவே யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பச்சரிசி தானமாக கொடுக்க சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் புதிய வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுக்கிரன் பத்தாம்

வீட்டில் பயணம் செய்கிறார். எட்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் விபரீத ராஜயோகத்தை தருவார்வியாபாரம் அமோகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் உங்களுடைய கை ஓங்கியிருக்கும். உச்சம் பெற்ற சுக்கிரன் சூரியனுடன் இணைந்திருப்பதால் புதிய வேலை கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் உருவாகும். பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிறைய சுப செலவுகள் வரும். மாத பிற்பகுதியில்

குருபகவானின் இடமாற்றம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. திருமண சுபகாரியங்கள் நடைபெறும்.

விரைய செவ்வாய் ராகு திடீர் செலவுகளை தருவார். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். இந்த மாதம் வியாழக்கிழமை சாஸ்தா கோவிலுக்கு சென்று வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, பங்குனி மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார்.

சுக்கிரன், புதனும் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிறைய சுபகாரியங்கள் நடைபெறும். ராகுவினால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

 

கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கண்டகச் சனி இருப்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அரசு தொடர்பான விசயங்களிலும் கவனம் தேவை.

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதம் நீங்கும்.

பாக்ய ஸ்தானத்தில் கிரகங்கள் வலு பெற்றுள்ளதால் மாணவர்கள் மேல்நிலைக் கல்வி தொடர்பாக புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும். சஷ்டி திதிகளில் முருகனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சூரியன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரன், புதனும் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குருவின் வீட்டில் சூரியன் அமர்வதால் தைரியம் அதிகரிக்கும் செல்வாக்கு உயரும் சொத்து சேர்க்கை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீடு மாற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். திடீர் சுப விரைய செலவுகள் வரும்.

குடும்பத்தில் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணம் நகைகள், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும்.

வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். உயரதிகாரிகளிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்து விடவும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இந்த மாதம் முதல் கிடைப்பதால் உங்களின் திறமை தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள்.

திருமணம் சுபகாரியங்கள் விசயமாக பேசி முடிக்கலாம். மாணவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திங்கட்கிழமை ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வர நன்மைகள் நடைபெறும்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் புதன் சஞ்சரிப்பதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரன், சூரியன், புதனின் நேரடி பார்கை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

திருமண சுப காரியங்கள் நடைபெறும். உச்ச சுக்கிரனின் பார்வையால் திடீர் பணவரவு கிடைக்கும். தடைகள் தாமதங்கள் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

குருவின் பயணம் சாதகமாக உள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஏப்ரல் 6ஆம் தேதிக்கு மேல் குருவின் பயணம் ஆறாம் வீட்டில் உள்ளதால் திடீர் நி தி நெருக்கடி ஏற்படும். வங்கிக் கடன் கிடைக்கும். தேவையில்லாத நட்புக்களை தவிர்த்து விடவும்.

இந்த மாதத்தில் வீடு நிலம் வாங்குவதற்கு தொடர்பாக பேசலாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த மாதத்தில் வெற்றிகள் மேலும் உங்களுக்கு அதிகரிக்க வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய யோகங்கள் தேடிவரும். சன்னா கடலை தானதாக கொடுங்கள். இனிப்பு பலகாரங்களை தானம் கொடுங்கள்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே சூரியன் ஆறாம் வீட்டில் சுக்கிரன், புதனுடன் இந்த வாரம் பயணிக்கப் போகிறார். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள்.

பிள்ளைகள் வாழ்க்கையில் சுப வாழ்க்கை நடைபெறும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் மறைவதால் எதிர்பாலின நட்புக்களிடம் கவனமாக இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள்.

பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. சண்டை சச்சரவுகள் நீங்கும். புதிய வேலை கிடைக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது.

 

இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் இந்த மாதம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். புதிதாக யாரை நம்பியும் பணம் கடனாக தர வேண்டாம்.

ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் விழிப்புணர்வு அவசியம். மாத பிற்பகுதியில் குருவின் பார்வை கிடைப்பதால் வேலை செய்யும் இடத்தில் செய்யும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

வீடு மனை வாங்கலாம். திடீர் திருமண யோகம் வரும், புத்திரபாக்கியம் கிடைக்கும். திடீர் திருப்பங்களும் யோகங்களும் நிறைந்த மாதமாக உள்ளது. பிரதோஷ நாட்களில் சிவ ஆலயம் சென்று வணங்குங்கள் நல்லதே நடைபெறும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, பங்குனி மாதத்தில் பூர்வீக சொத்து விற்பனை விசயங்களில் கவனம் தேவை.

சுக்கிரன், சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். கர்ப்பிணிப் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும்.

புதிய வேலைக்கு மாற வாய்ப்பு உள்ளது. சுக்கிரன் புதன் சாதகமான நிலையில் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் மாற்றம் வரும். குருவின் இடமாற்றம் சில சிக்கல்களை தரலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். வேலைச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் சில பிரச்சினைகள் வரலாம். தேவையில்லாத வதந்திகள் வரலாம் கவனம் தேவை.

புதன்கிழமைகளில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்குங்கள் நல்லதே நடக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இது யோகமான மாதம். நான்காம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் திடீர் திருப்பங்கள் யோகங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து விசயங்கள் சுமூகமாக முடியும்.

செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்களுக்கு பண வரவை சரளமாக கொடுத்து வருகிறார்.

வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உள்ள சனி சில சங்கடங்களைக் கொடுத்தாலும் குருவின் சஞ்சாரம் குதூகலத்தை ஏற்படுத்தும். மாத இறுதியில் குரு பகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சகோதரர்களால் சில செலவுகள் வரும்.

செவ்வாயும் ராகுவும் ஆறாம் வீட்டில் பயணிப்பதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு.

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள் வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் கிரகங்கள் வலுவாக கூடியுள்ளன. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். திடீர் பண வரவு அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் குடியேறும் குதூகலம் அகிதரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பண வருமானம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் திருமணம் விசயமாக பேசலாம். சகோதரர்கள், உறவினர்களின் உதவியும் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை கிடைக்கும். வீடு மனை சொத்து சேர்க்கை ஏற்படும்.

சிலர் புதிய வீடு வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் இடமாற்றமும் கிடைக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருபகவான் உங்களுடைய ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு மாறப்போவதால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

சனிக்கிழமையன்று எள் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்கவும். அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வாருங்கள். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் ஊற்றி வர பாதிப்புகள் நீங்கும்.

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் பயணம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கோபம் குறையும் மன நிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும்.

சுக்கிரன் புதன் சாதகமாக பயணம் செய்வதால் மன நிம்மதி ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக இந்த வாரம் பேசலாம். ஏப்ரல் 5ஆம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்குள் நுழைகிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

உணவு விசயத்தில் கட்டுப்பாடு தேவை. குருவின் பார்வை உங்களுக்கு குதூகலத்தை கொடுக்கும். திடீர் திருமண யோகம் கை கூடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

புதிய வேலை கிடைக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே இந்த பங்குனி மாதத்தில் சூரியன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். சுக்கிரன் உங்கள் ராசியில் இந்த மாதம் உச்சமடைகிறார்.

கடந்த மாதங்களில் இருந்த வீண் விரைய செலவுகள் நீங்கும். சுக்கிரன் சூரியன் பயணங்களால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் முகத்தில் பொலிவு கூடும். உணவு விசயத்தில் கவனம் தேவை.

செவ்வாய் ராகுவின் பயணத்தால் பண வரவு அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் புதன் சாதகமாக பயணம் செய்வதால் நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும் அதிரடி லாபம் கிடைக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் செலவு அதிகரிக்கிறதே என்ற கவலை வரும். பங்குனி 23ஆம் தேதி வரை லாப ஸ்தானத்தில் பயணிக்கும் குரு பகவானால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ஏப்ரல் 5ஆம் தேதிக்கு மேல் குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகி செல்வதால் திடீர் விரைய செலவுகள் வரலாம். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பங்குனி உத்திர நாளில் முருகன் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.