
தேர்தல் மேடையில் கால் பதித்த முத்தையா முரளிதரன்- என்ன சொன்னார் தெரியுமா..?
தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லாத காரணத்தினால் தனது சகோதரனை தேர்தலில் களமிறக்கியுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடும் முத்தையா பிரபாகரனின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கூட்டமானது மஸ்கெலிய பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட முரளி, ஜனாதிபதியின் வேண்டுதலுக்கு அமைவாகவே தமது சகோதரரை அரசியலில் ஈடுபட அனுமதித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.