
மதரஸா பள்ளிகள் தொடர்பாக அரசாங்கம் இன்று வெளியிட்ட செய்தி
நாட்டில் உள்ள மதரஸா பள்ளிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் 1,565 மதரஸா பள்ளிகள் உள்ளன. இவற்றின் கல்வி செயல்முறை, பாடதிட்டங்கள் அல்லது விரிவுரையாளர்களைப் பற்றி ஆராய்ந்து அவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் தேவை ஏற்படின் இதுபோன்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது எந்த வகையிலும் சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறினார்.
இந்த மதரஸா பள்ளிகள் மோதலை பரப்புகின்றன, நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் அச்சுறுத்தும் வகையில் கற்பிக்கப்படுகின்றன என்றால், அரசாங்கம் இதில் தலையிடுவது உரிமை அல்ல. இது தலையாய கடமை என்றார்.