கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கடத்திய 17 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 17 பேரை கிளிநொச்சி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து எட்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒன்பது ரிப்பர் லொறிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
கிளிநொச்சி உமையாள்புரம், முரசுமோட்டை, உருத்திரபுரம், திருவையாறு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் குறித்த வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக கிளிநொச்சி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கையகப்படுத்தப்பட்ட வாகனங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு இது குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்