திடீரென மாயமாகிய இராட்சத நட்சத்திரம்

திடீரென மாயமாகிய இராட்சத நட்சத்திரம்

இராட்சத நட்சத்திரம் ஒன்று திடீரென காணாமல் போயிருப்பது வானியலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொலைதூர நட்சத்திரம் ஒரு சுப்பர் நோவாவாக வெடிக்காமல் கருந்துளை ஒன்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது பற்றி அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அது உண்மையாயின் பெரிய நட்சத்திரம் ஒன்று இந்த வகையில் தனது வாழ்வை முடித்துக் கொண்ட முதல் உதாரணமாக அமையும்.

எனினும் இதற்கு வேறு சாத்தியங்களும் இருக்கக் கூடும் என்று இந்த ஆய்வு பற்றிய விபரத்தை வெளியிட்டிருக்கும் வானியல் சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நட்சத்திரம் கின்மான் பால்மண்டலத்தில் சுமார் 75 மில்லியன் ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது.

இது எமது சூரியனை விடவும் சுமார் 2.5 மில்லியன் மடங்கு ஒளிரக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.