சிரியாவில் உள்நாட்டு போர் மூண்டது: மார்ச் 15- 2011

சிரியாவில் உள்நாட்டு போர் மூண்டது: மார்ச் 15- 2011

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனித்தனியே போராடி வந்தனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள

 

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனித்தனியே போராடி வந்தனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி நிலையை விலக்கி விட்டு ஜனநாயக முறையிலான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என சிதறிக்கிடந்த போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து 15-03-2011 முதல் அதிபரின் ஆட்சிக்கு எதிராக ஆக்ரோஷமாக போரிட்டு வருகின்றன.

 


ஹிட்லருக்கு பிறகு சொந்த மக்களின் மீது ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து அதிபர் பஷர் அல் ஆசாத் தாக்குதல் நடத்தியதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியதையடுத்து அவற்றை அழித்துவிட பஷர் அல் ஆசாத் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து, சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனினும், மக்கள் எதிர்பார்த்த ஜனநாயக ஆட்சி இன்னும் அமைக்கப்படாததால் அதிபருக்கு எதிரான ஆயுதப் போராட்டமும், இந்த போராட்டத்தை முறியடிக்கும் அரசின் அடக்குமுறையும் இன்னும் தொடர்ந்தபடியே உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த உள்நாட்டுப் போரில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும், 65 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் அகதிகளாகியுள்ளனர்.