வவுனியாவில் சிறுவனை தனிமையில் அழைத்துச்சென்ற இருவரை நையப்புடைத்த மக்கள்
வவுனியாவில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் இரண்டு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை சேகரிப்பதற்காக வந்திருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்களே சிறுவனை தனிமையில் அழைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின்போது சிறுவன் சத்தமிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் இரண்டு நபர்களையும் கையும் மெய்யுமாக பிடித்து நையப்புடைத்ததுடன் விசாரணைக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்