இன்றைய ராசி பலன்கள் 14/3/2021

இன்றைய ராசி பலன்கள் 14/3/2021

மேஷம்

முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். முன்பு செய்த உதவிக்கு இப்போது பலன் கிடைக்கும். எதிர்பார்த்த வரவு உண்டு. தொழில் நலன்கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

ரிஷபம்

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த முயற்சி கைகூடும்.வாழ்க்கைத் தரம் உயர வழிபிறக்கும். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம்

நட்பால் நன்மை கிட்டும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் லாபம் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் அகலும்

சிம்மம்

நினைத்தது நிறைவேறவில்லையே என்ற கவலை ஏற்படும் நாள். பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தப்படுவீர்கள்

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். வீடு கட்டும் பணி தொடரும்

துலாம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. உறவினர்கள் சிலா் உதவி கேட்டு நச்சரிக்கலாம். உத்தியோக நலன் கருதி ஊா் மாற்றம், செய்யும் எண்ணம் மேலோங்கும்

விருச்சகம்

அலைபேசி வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும்

தனுசு

அடுத்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய பயம் மேலோங்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செலவிடும் சூழ்நிலை உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்

மகரம்

காலை நேரத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். முக்கியப்புள்ளிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும்.

கும்பம்

கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்

மீனம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் விலகுவர். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். கல்யாண முயற்சி கைகூடும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்