நாட்டில் நேற்றைய தினம் பதிவான கொவிட் மரணங்களின் விபரங்கள்
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 5 பேரின் மரணங்கள் நேற்று பதிவாகின.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 525 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கறைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர், அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட் தொற்றுடையவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கும், பின்னர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கும் மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, சுவாசத்தொகுதி தொற்று, கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சிறுநீரக தொற்று நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
குருதி நஞ்சானமை, கொவிட் தொற்று மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே அவரின் உயிரிழப்புக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர், வடகொழும்பு போதனா வைத்தியசாலையில், கொவிட் தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
குருதி நஞ்சானமை, பல உறுப்புகள் செயலிழந்தமை மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
றாகமை வல்பொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா மற்றும் குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சியே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொவிட்19 தொற்றுறுதியானவர் என கண்டறியப்பட்டதை அடுத்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மரணித்தார்.
இதய நோய், தீவிர சிறுநீரக நோய், கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது