ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஹேமாகம - கோனபொல பகுதியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைதான 57 வயதான குறித்த பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ 268 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துவருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்