மின்சார வாரியம் மீது பிரசன்னா குற்றச்சாட்டு

மின்சார வாரியம் மீது பிரசன்னா குற்றச்சாட்டு

தமிழில் பிரபல நடிகராக இருக்கும் பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தாவது ஊரடங்கில்தான் சில தளர்வுகளை அறிவித்து இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி உள்ளது. 

ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டை அளவீடு செய்யவில்லை. மாறாக அதற்கு முந்தைய கட்டணத்தையே கட்டச் சொன்னார்கள். 

 

தற்போது வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டு அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரசன்னா மின்சார வாரியம் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

 

அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “இந்த கொவிட் லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.