இராகலை தோட்ட தொடர் குடியிருப்பில் தீப்பரவல்:16 வீடுகள் சேதம் (படங்கள்)

இராகலை தோட்ட தொடர் குடியிருப்பில் தீப்பரவல்:16 வீடுகள் சேதம் (படங்கள்)

இராகலை தோட்டம் கீழ்ப்பிரிவு முதலாம் இலக்க தொடர் குடியிருப்பில் இன்று அதிகாலை 3.45 அளவில் பரவிய தீப்பரவல் காரணமாக 16 வீடுகள் முற்றாக சேதமாகின.

இந்த தீப்பரவல் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என இராகலை காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 75 பேர் இராகலை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்