கொஹுவலயில் மீட்கப்பட்ட எரியுண்ட சடலத்திற்கு மரபணு பரிசோதனை செய்ய தீர்மானம்

கொஹுவலயில் மீட்கப்பட்ட எரியுண்ட சடலத்திற்கு மரபணு பரிசோதனை செய்ய தீர்மானம்

கொஹுவல, ஆசிரி மாவத்தையில் மகிழுந்து ஒன்றினுள் எரியுண்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு மரபணு பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொஹுவல, ஆசிரி மாவத்தையில் மகிழுந்து ஒன்றினுள் எரியுண்ட சடலமாக நபர் ஒருவர் மீட்கப்பட்டிருந்தார்.

தெல்கந்த பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப் பாக விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது