
எவ்வித தட்டுப்பாடும் இன்றி உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியும்
சித்திரைப் புத்தாண்டு காலத்தில், எவ்வித தட்டுப்பாடும் இன்றி, உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பயறு, கௌப்பி, உழுந்து முதலாவற்றின் விலைகளில் தற்போது அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது.
இதேநேரம், தற்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களான, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, கொத்தமல்லி உள்ளிட்ட மேலும் சில பொருட்களுக்காக, இறக்குமதியாளர்கள் என்ற அடிப்படையில் இறக்குமதிக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடோ அல்லது விலை பாரிய அதிகரிப்போ இல்லை.
ஆனால், இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள பயறு, கௌப்பி, உழுந்து, மஞ்சள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைதல் மற்றும் அரசாங்கத்தினால் வரி அறவீடு மேற்கொள்ளல் என்பன இடம்பெற்றால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் சேனாரத்ன தெரிவித்துள்ளார்