வெல்லாவெளி பிரதேசத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வெல்லாவெளி பிரதேசத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வெல்லாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் நீரால் நிரம்பியுள்ளதையடுத்து அக்குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் அப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குளங்களில் நீரருந்துவதற்காக செல்கின்ற ஆடுகள், மாடுகள் போன்ற விலங்கினங்கள் முதலைக்கு இரையாகி வருவதாக அப்பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் வெல்லாவெளி, போரதீவு, கோவில் போரதீவு, பொருகாமம், பழுகாமம் உட்பட பல பிரதேசங்களில் அமைந்துள்ள குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடற்றொழில்களில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மிருகங்களுக்கான நீர்த் தேவைகளை உடையோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்