இங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி

இங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி

சுற்றுலா இங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், அசேன் பண்டார 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகூடுதலாக 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஷாய் ஹோப் (Shai Hope) போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது