வர்த்தகர் ஒருவரின் எரியுண்ட சடலம் கொஹுவலயில் மீட்பு

வர்த்தகர் ஒருவரின் எரியுண்ட சடலம் கொஹுவலயில் மீட்பு

கொஹுவல - ஆசிரி மாவத்தையில் எரியுண்ட மகிழுந்து ஒன்றில் இருந்து 33 வயதான வர்த்தகர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

களுபோவில - ஹாதிய மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்