
இன்றைய ராசி பலன்கள் 11/3/2021
மேஷம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
ரிஷபம்
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் உயரும்
மிதுனம்
பிரயோகித்த சொற்களால் பிரச்சினை ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை
கடகம்
காலை நேரத்தில் கடன் சுமை கூடும் நாள். வீண் வாக்கு வாதங்களால் மனக்கலக்கம் ஏற்படும். பயணங்களால் நிம்மதி குறையும். வீடு வாங்கும் முயற்சியில் தடை ஏற்படும். யோசித்துச் செயல்படுவது நல்லது
சிம்மம்
யோகமான நாள். பாகப்பிரி வினைகள் சுமுகமாக நடை பெறும். பாசம் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும்
கன்னி
இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்களின் உதவியோடும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்
துலாம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். துணையாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கருத்து வேறுபாடுகள் மறையும்
விருச்சகம்
சிறப்புகள் வந்து சேர சிவனை வழிபட வேண்டிய நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல் வாதிகளின் ஆதரவோடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்
தனுசு
கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். காரியத்தை முடிக்க நண்பர்கள் உதவி செய்வர். எடுத்த செயலில் வெற்றி கிட்டும். வியாபாரப் போட்டிகள் அகலும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்
மகரம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்கள் ஏற்படலாம். மன அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு
கும்பம்
சுகமான வாழ்வமைய சொக்கநாதரை வழிபட வேண்டிய நாள். போட்டியாகச் செயல்பட்டவர்கள் விலகுவர். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறை வேறும். நட்பால் நன்மை ஏற்படும்
மீனம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்