சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் கடந்த சில நாட்களாக தாம் வாழும் பதியில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டதுக்கு மேல் இவரது தொல்லையை தாங்கிக்கொள்ள முடியாத சிறுமிகள் அயலவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் முதியவரை பிடித்த காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்