தோட்ட முகாமையாளரை தாக்கிய சம்பவம்; தோட்ட தொழிலாளர்கள் 22 பேருக்கு பிணை

தோட்ட முகாமையாளரை தாக்கிய சம்பவம்; தோட்ட தொழிலாளர்கள் 22 பேருக்கு பிணை

தோட்ட முகாமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்கள் 22 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது தலா ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும், ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்