இலங்கையில் மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கான சகல பொறுப்புகளும் இந்தியாவிற்கே உள்ளது - சீனித்தம்பி யோகேஸ்வரன்

இலங்கையில் மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கான சகல பொறுப்புகளும் இந்தியாவிற்கே உள்ளது - சீனித்தம்பி யோகேஸ்வரன்

இலங்கையில் மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கான சகல பொறுப்புகளும் இந்தியாவிற்கே இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண ஆட்சி முறையுடன் காணி, நிதி மற்றும் காவற்துறை அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியதும் அவர்களிடம் உள்ள பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடமைகளை இந்தியா சரிவர நிறைவேற்றும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்