
இன்றைய தினம் 978 பயணிகள் இலங்கை வருகை
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 14 விமானங்கள் ஊடாக 978 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் 185 பேர் கட்டாரில் இருந்து வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேநேரம் 332 பயணிகள், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
குறித்த கலாப்பகுதியில் ஜேர்மனி, போலந்து, அவுஸ்திரேலியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, மற்றும் யுக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து 72 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்