போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது
மாளிகாவத்தை பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 34 வயதானவர் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், லுனாவ மோய பிரதேசத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் போதை மருந்து வைத்திருந்த நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது