![](https://yarlosai.com/storage/app/news/734ce4b38549f10fb912c17cc3e07de8.jpg)
வடக்கு கிழக்கில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம்
நாட்டில் கொழும்பிற்கு அடுத்தப்படியாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே அதிகளவானோர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் புள்ளி விபரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 2 ஆயிரத்து 228 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த காலப்பகுதி வரையில் டெங்கு நோயினால் 2 ஆயிரத்து 182 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு மாவட்டங்களிலும் வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாது.
எனினும் கடந்த இரண்டு மாதங்களில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின்; எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது.
எனினும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் ஆயிரத்து 902 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாங் காணப்பட்டுள்ளனர்.
பின்னர் அதன் எண்ணிக்கை படிப்படிhக குறைந்த போதிலும் கடந்த மே மாதம் யாழ்ப்பாணத்தில் 112 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய அந்த மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 3 ஆயிரத்து 105 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் பரவல் குறைவாகவே காணப்படுகின்றது.
இந்த வருடம் இதுவiரான காலப்பகுதி வரையில் முல்லைத்தீவில் 65 பேரும், கிளிநொச்சியில் 115 பேரும், மன்னாரில் 121 பேரும், நுவரெலியாவில் 130 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மொனராகலை மாவட்டத்தில் டெங்கு நோயினால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.
நாடு முழுவதும் வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
பின்னர் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்தில் அதன் எண்ணிக்கை குறைந்துள்ளமையை தொற்று நோய் தடுப்பு பிரிவின் தரவுகளில் அவதானிக்க முடிகின்றது.
எனினும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.