அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - தேர்தல் ஆணைக்குழு

அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - தேர்தல் ஆணைக்குழு

38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போதுவரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பியிருந்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான, சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், புதிய நெறிமுறைகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள், அடிப்படை தகைமைகளின்படி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்ததன் பின்னர், நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில், 76 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது