தமிழ் தேசியவாதி பழ.நெடுமாறன் பிறந்த தினம் (மார்ச்.10, 1933)

தமிழ் தேசியவாதி பழ.நெடுமாறன் பிறந்த தினம் (மார்ச்.10, 1933)

தமிழ் தேசியவாதியான பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையைச் சாரும். பழ.நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராஜர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார்.

 

தமிழ் தேசியவாதியான பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.

1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையைச் சாரும்.

 


பழ.நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராஜர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார்.

இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்டபோது அவரை உயிருடன் மீட்டார். காமராஜர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு ‘மாவீரன்’ என்று பெயர் சூட்டினார்.

தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் டெல்லியில் முடிவு செய்யும் டெல்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராஜர் காங்கிரஸ் இயக்கத்தை தோற்றுவித்தார்.

பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

1801 - பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

1902 - அசையும் படப்பிடி கருவியை தாமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1902 - துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

1906 - வடக்கு பிரான்சில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1922 - கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.  

1933 - கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.

1957 - அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் பிறந்த தினம்.

1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.