அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் தொடரலாமா? அல்லது சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? என்பது குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.

சென்னை - கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த கூட்டத்தின் போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன