வாகன விபத்தில் 40 வயது பெண் பலி!
நிகவெவவிலிருந்து கலென்பிந்துனுவெவ நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 40 வயதான பெண் ஒருவர் என கலென்பிந்துனுவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிகிந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் இப்பெண்ணின் தலை சரீரத்திலிருந்து வேறாகியிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த வேன்னின் ஓட்டுநரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்