போதைப்பொருள் பணியக அதிகாரிகள் 17 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் பணியக அதிகாரிகள் 17 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருட்களை, விற்பனை செய்தமை தொடர்பில் கைதான 17 சந்தேகத்துக்குரியர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்குரியவர்கள் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் புத்தி ஸ்ரீ ராகல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்படி அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்