மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல்மாகாணத்தில் தரம் ஐந்து,  கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நேற்று கல்வியமைச்சர் அறிவித்திருந்தார்