கற்பிட்டியில் 107 கிலோ கஞ்சா சிக்கியது!

கற்பிட்டியில் 107 கிலோ கஞ்சா சிக்கியது!

கற்பிட்டி சோமதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 107 கிலோ 25 கிராம் கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கஞ்சா அடங்கிய பொதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது