தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 10 பேர் கைது
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3,335 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 10 பேரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3300 பேருக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது