மண்ணெண்ணெய்க்கான மானியங்களை முறைகேடின்றி நேரடியாக பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அறிவுறுத்தல்

மண்ணெண்ணெய்க்கான மானியங்களை முறைகேடின்றி நேரடியாக பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அறிவுறுத்தல்

எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் அரச வங்கிகளிடமிருந்து டொலர்களில் கடன் பெறுவதற்கு பதிலாக ரூபாயில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து கலந்துரையாடுமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு பிரதமர் மகிந்த ராஜபகஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு இன்று முதன்துறையாக கூடிய போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய்க்கான மானியங்கள் எந்தவித முறைகேடுகளும் இன்றி நேரடியாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுமாறும், அது தொடர்பான நடைமுறைகளை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் இதன்போது அறிவுறுத்தியுள்ளார்