
கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 359 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 77 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 74 பேருக்கும் காலி மாவட்டத்தில் 34 பேருக்கும் தொற்றுறுதியானது.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் குருணாகலில் தலா 17 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இது தவிர வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 22 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தொற்றுறுதியாகியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 30 ,255 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 16, 919 பேருக்கும் களுத்துறையில் 6 ,283 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
நாட்டில் இதுவரையில் 85 ,694 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு அவர்களில் 82 ,058 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான மூவாயிரத்து 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை முப்படையினரின் கீழ் முன்னெடுத்து செல்லப்படும் 100 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,899 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் நேற்றைய தினம் 9 ,575 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது