கடந்த மூன்று நாட்களில் 10,000 ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

கடந்த மூன்று நாட்களில் 10,000 ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும்  10,000 ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரோனா கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கடந்த வெள்ளிக்கிழமை 7,366 பி.சி.ஆர். பரிசோதனைகளும் சனிக்கிழமை 8,343 பரிசோதனைகளும் ஞாயிற்றுக்கிழமை 9,575 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆக காணப்படும் அதேவேளை 502 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 7 இலட்சத்து 29 ஆயிரத்து 562 பேர் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்